சொத்து குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், அவரது விடுதலை விவகாரத்தில், தொழில்நுட்ப தவறுகளை குறிப்பிட்டு, வக்கீல் பண்டிட் பரமானந்த் கட்டாரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘7 ஆண்டுக்கு மேல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளுக்குத்தான், குற்றவியல் நடைமுறை சட்டப்படி, மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையே விதிக்கப்பட்டதால், திருத்தம் கோரும் மனுவைத்தான் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருக்க வேண்டும். எனவே, அவரை விடுவித்த ஐகோர்ட்டு தீர்ப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பான சட்ட குழப்பங்களுக்கு விடை காண எனது மனுவை அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. நடிகர் சல்மான்கான் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதி கேஹர் அமர்வுக்கு மனுவை நீதிபதிகள் மாற்றினர். அங்கு அம்மனு, 5–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.