கிங்ஸ்டன்: ஜமைக்காவில் நடந்த ரேசர்ஸ் கிராண்ட் பிரீ தடகள போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். பரபரப்பான இப்போட்டியில், போல்ட் பந்தய தூரத்தை 9.88 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். சக ஜமைக்கா வீரர்கள் யோகன் பிளேக் 3வது இடமும், அசபா பாவெல் 4வது இடமும் பிடித்தனர். நிகெல் ஆஷ்மீட் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜமைக்கா அணி வீரர்கள் தேர்வு போட்டி ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி மிகுந்த உற்சாகமளிப்பதாக போல்ட் கூறியுள்ளார். மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் உள்ளூர் வீராங்கனையும் 2 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.