Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

குரைப்பதை தடுக்க நாய் வாயை கட்டிய பெண்ணுக்கு ஜெயில்


குரைப்பதை தடுக்க நாய் வாயை கட்டிய பெண்ணுக்கு ஜெயில் தண்டனை விதித்து அமெரிக்கா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அமெரிக்காவை சேர்ந்த பெண் காத்ரின் லெமன்ஸ் (45). இவர் தனது வீட்டில் ‘பிரவுன்’ என்ற நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த நாய் அடிக்கடி குரைத்தது. அது காத்ரினுக்கு தொந்தரவாக இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாயின் வாயை ‘டேப்’ வைத்து சுற்றி கட்டி வைத்தார். அக்காட்சி ‘பேஸ் புக்’ சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைப்பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் போலீசில் புகார் செய்தனர். எனவே அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 60 நாட்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.