Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

ஷங்காய் உலகப் பட விழாவில் பஞ்சாபி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அதிரடி மன்னன் ஜாக்கி சான்: அசத்தல் வீடியோ


சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்று வரும் உலகப் பட விழாவில் அதிரடி மன்னன் ஜாக்கி சான் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடி அசத்திய தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்று வரும் உலகப் பட விழாவில் அதிரடி மன்னன் ஜாக்கி சான் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடி அசத்திய தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஷங்காய் நகரில் 19-வது உலகப் பட விழா நடைபெற்று வருகிறது. இந்த படவிழாவில் பங்கேற்ற ஆங்கிலப் பட அதிரடி நாயகன் ஜாக்கி சான், 1990-ம் ஆண்டு வெளியான பஞ்சாபி பாடகர் தலர் மெஹ்மூத்தின் ‘தனக் தனக் தூன்’ பாடலுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உடன் இணைந்து ‘குத்து நடனம்’ ஆடி அசத்தினார்.

பஞ்சாபியான சோனு சூட், ஜாக்கி சானுடன் சேர்ந்து ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சீன அதிபர் க்சி ஜின்பிங் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து மூன்று திரைப்படங்களை கூட்டாக தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

அவற்றில் ஒன்றான ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் தமிழில் வெளியான ‘அனேகன்’ படத்தில் கதாநாயகியாக தோன்றிய அமிரா தஸ்துர் என்பவரும் நடித்து வருகிறார்.

ஜாக்கி சானின் குத்தாட்டத்தை காண..,


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.