Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

உலகின் மிக சிறந்த ரெஸ்டாரன்ட் ஆக இத்தாலிய நாட்டின் பிரபல உணவகம் தேர்வு


உலகின் சிறந்த 50 ரெஸ்டாரன்ட்களில் இத்தாலிய நாட்டின் பிரபல உணவகமான ஆஸ்டெரியா பிரான்செஸ்கானா (Osteria Francescana) தலைசிறந்த உணவகமாக தேர்வாகியுள்ளது.

உலகில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகங்களை பற்றிய செய்திகளுடன் அவற்றை தரவரிசைப்படுத்தி பட்டியலிடும் பிரபல பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த 50 உணவகங்களை தேர்வு செய்து வருகிறது.

உலகில் உள்ள சுமார் ஆயிரம் சமையல் கலைஞர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், சமையல் கலை எழுத்தாளர்கள் ஆகியோர் கொண்ட தேர்வு குழுவினர் சிறந்த உணவகங்களை தேர்வு செய்கின்றனர்.

அவ்வகையில், கடந்த (2015) ஆண்டுக்கான தலைசிறந்த உணவகமாக இத்தாலி நாட்டின் மாடென்னா நகரில் உள்ள  ஆஸ்டெரியா பிரான்செஸ்கானா (Osteria Francescana) உணவகம் தேர்வாகியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இடத்துக்கான பரிசை பெற்றிருந்த ஸ்பெயின் நாட்டின் கிரோனா நகரில் உள்ள எல் செல்லெர் டி கேன் ரோக்கா இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இலெவென் மேடிசன் பார்க் ரெஸ்டாரன்ட் மூன்றாம் இடத்தையும், பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள சென்ட்ரல் ரெஸ்டாரன்ட் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நான்காவது இடத்திலும் வந்துள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 உணவகங்களில் சரிபாதி ஐரோப்பிய நாடுகளிலும், 12 உணவகங்கள் அமெரிக்க நாடுகளிலும், ஐந்து உணவுகங்கள் ஆசிய நாடுகளிலும் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.