கடித பரிமாற்றத்தில் ’டியர்’ பயன்படுத்துவதற்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கும் பீகார் மாநில கல்வித்துறை மந்திரிக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டு உள்ளது.
பீகார் கல்வித்துறை மந்திரி சவுத்ரி, ஸ்மிரிதி இரானியை டுவிட்டரில் தொடர்பு கொண்டு “டியர் ஸ்மிரிதிஇரானி எப்போது நாம் புதிய கல்விக் கொள்கையை பெற உள்ளோம்? உங்களுடைய காலண்டரில் 2015 எப்போது முடிகிறது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். சவுத்ரி ’டியர்’ என்ற வார்த்தை பயன்படுத்தியதற்கு ஸ்மிரிதிக்கு சரியாகப்படவில்லை, ‘பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல’ என சுட்டிக்காட்டி பதில்டுவிட் செய்து உள்ளார். அவருடைய எதிர்ப்புக்கு சவுத்திரி பதிலளிக்கையில் ”அவமரியாதைக்கு ஒன்றும் கிடையாது, பணி ரீதியிலான இமெயில் என்பதால் அப்படி தொடங்கி இருந்தேன்’’ என்றார்.
அதற்கு ஸ்மிரிதி இரானி, ‘‘அசோக் சவுத்ரி, உங்களுக்கும் சரி, வேறு எந்தவொரு நபருக்கும் சரி எனது தகவல்தொடர்புகள் அதார்னியா (மரியாதைக்குரிய) என்றுதான் தொடங்கும்’’ என பதில் அளித்திருந்தார். ‘டியர்’ என்ற வார்த்தையை பீகார் கல்வி மந்திரி பயன்படுத்தியதற்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி எதிர்ப்பு தெரிவித்து, இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.