Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

இந்தோனேசியாவில் பேய்மழை, வெள்ளத்துக்கு 24 பேர் உயிரிழப்பு


இந்தோனேசியாவில் பேய்மழை மற்றும் வெள்ளத்துக்கு 24 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியா நாட்டில், மத்திய ஜாவா மாகாணத்தில் இடைவிடாமல் பேய் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பலத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. அவற்றில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 26 பேர் காணாமல் போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ நுக்ரோஹோ கூறுகையில், மத்திய ஜாவா மாகாணத்தில் 16 பிரதிநிதி ஆட்சி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து விட்டது. இதன் காரணமாக பல இடங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன, என்றார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேற்கு சும்த்ராவிலும் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. மழை மற்றும் வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஆயிரக்கணக்கானோர் இடமின்றி தவித்து வருகின்றனர். எப்போதும் ஜூன் மாதங்களில் இப்பகுதியானது மழையின்றி காணப்படும். இதற்கிடையே தேசிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் ஜூன் இறுதியிலும், ஜூலை தொடக்கத்திலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது. சுமித்ரா, ஜாவா மற்றும் கிழக்கு நுசா டெங்காராவில் கடல்பகுதியில் உயரமான அலைகள் எழும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.