அமெரிக்காவில் ஒர்லாண்டா துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், மற்றொரு பகுதியில் துப்பாக்கிகளுடன் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் ஒர்லாண்டா நகரில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஒமர்மைதீன் என்பவன் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 50 பேர் உயிரிழந்தனர், 53 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கலிபோர்னியாவின் வெஸ்ட் ஹாலிங்வுட் பகுதியில் ஜேம்ஸ் வெஸ்லி ஹொவெல் என்ற 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இண்டியானாவைச் சேர்ந்த அந்த வாலிபரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை போன்ற ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒரு ஒரினச்சேர்க்கையாளர்கள் பேரணியில் கலந்து கொண்டு தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருக்கலாம் என செய்தி வெளியானது. ஆனால், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த நபரிடம் மூன்று தாக்குதல் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் நச்சுப்புகை முகமூடிகள் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சாண்டா மோனிக்கா கடற்கரை அருகில் கைது செய்யப்பட்ட அந்த நபர், சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடியதாக உள்ளூர் வாசிகளால் அடையாளம் காட்டப்பட்டு உள்ளார்.
அந்த நபருக்கும் ஒர்லாண்டோ துப்பாக்கிச் சூட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.