ஒரே நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புனேயை சேர்ந்த போலீஸ் தம்பதி சாதனை படைத்து உள்ளனர்.
புனே நகரத்தை சேர்ந்தவர் தினேஷ் ரத்தோடு. இவரது மனைவி தார்கேஷ்வரி. இருவரும் புனே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகின்றனர். இருவருமே சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை ஆவர்.
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது இவர்களது வாழ்நாள் லட்சியமாக இருந்து வந்தது. இதற்காக கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெற்று வந்தனர்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் விடுமுறையில் சென்றனர். புனேயில் இருந்து நேபாளத்திற்கு சென்ற இருவரும் அங்கும் கடும் பயிற்சி செய்தனர். நேற்று கணவர், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தனர்.
அங்கு இருவரும் இந்திய தேசியகொடி மற்றும் மராட்டிய போலீஸ் கொடியையும் நாட்டினர். இதுகுறித்து சாதனை போலீஸ் தம்பதி இருவரும் கூறுகையில், ‘‘நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்தோம்.
இந்த சாதனையை செய்த பிறகே குழந்தை பெற்று கொள்வது என்றும் முடிவு செய்திருந்தோம். நாங்கள் இன்று (நேற்று) இந்த சாதனையை செய்து வெற்றி பெற்றுள்ளோம்” என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.