அடுத்த 15 ஆண்டில் இந்தியாவில் 10 கோடியே 1 லட்சம் பேர் சர்க்கரை நோயாளியாக இருப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. 2000–ம் ஆண்டில் 3 கோடியே 20 சர்க்கரை நோயாளிகள் இருந்தனர். 2013–ல் அது 6 கோடியே 30 லட்சமாக அதிகரித்தது.
தொடர்ந்து சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால் இது மோசமான நிலையை எட்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இன்னும் 15 ஆண்டில் இந்தியாவில் 10 கோடியே 1 லட்சம் பேர் சர்க்கரை நோயாளியாக இருப்பார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவில் இதற்கு முன்பு ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அது ஓரளவு கட்டுக்குள் உள்ளது. ஆனால் இப்போது குழந்தைகள் உடல் எடை அதிகமாகி வருவதாக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதுவும் சர்க்கரை நோய் உருவாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 9.5 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இது உலக சராசரியை விட அதிகமாகும். எனவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.