இந்திய விமானப் படை வரலாற்றில் முதன்முறையாக போர் விமானங்களை இயக்கும் தகுதி பெற்றுள்ள மூன்று பெண்கள் இன்று விமானிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் மட்டுமே பெண்கள் தற்போது விமானிகளாக உள்ளனர். இனி, போர் விமானங்களிலும் ஆர்வமுள்ள இளம்பெண்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று இந்திய விமானப்படை தளபதி ஆருப் ராஹா கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போர்விமானங்களில் ஆண்களைப்போல் பெண் விமானிகளும் இனி பைலட்களாக பணிபுரிய ராணுவ அமைச்சகம் 24-10-2015 அன்று ஒப்புதல் அளித்தது. இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் தற்போது பயிற்சி பெற்றுவரும் பெண்களில் இருந்து இதற்கான முதல்குழுவினர் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய விமானப்படையில் தற்போது சுமார் 1500 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 90 பேர் விமானிகளாகவும் 14 பேர் வழிகாட்டிகளாகவும் பணிபுரிகின்றனர். மீதமுள்ளவர்கள் நிர்வாகம், கட்டுமானம், வானிலை ஆய்வியல், வழிகாட்டுதல், கல்வி, ஏரோனாட்டிகல் என்ஜினியரிங், மெக்கானிக்கல், மின்னணு மற்றும் கணக்கியல் துறைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போர் விமானங்களை இயக்கும் பயிற்சிகளை முடித்து முழுத்தகுதி பெற்றுள்ள பாவனா காந்த், மோகனா சிங், அவனி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்கள் இன்று இந்திய விமானப் படையில் விமானிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
எதிரி நாட்டை பந்தாடும் நமது போர் விமானங்களை அனாயசமாக ஓட்டி ஆண்களுக்கு நிகராக நாங்களும் போர்க்களத்தில் எதிரிகளை கலங்கடிப்போம் என்று இவர்கள் இனி நிரூபிக்கப் போகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.