Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

என்.எஸ்.ஜி., உறுப்பினராகும் முயற்சிக்கு சீனா... பிரதமர் மோடியின் 'மேஜிக்' பலிக்குமா


என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தின் உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு, சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் ஆதரவை கோரி, பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா, 1974ல், தன் முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதைத் தொடர்ந்து, அணு சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது தான், என்.எஸ்.ஜி.,

இந்த அமைப்பில், 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகள், தங்களுக்குள் அணு மூலப்பொருட்கள், அணுஉலை தொழில் நுட்பங்களை பரஸ்பரம் வினியோகம் செய்து கொள்கின்றன. இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடாக, இந்தியா முயற்சித்து வருகிறது.
நேரடியாக சென்று...இதற்கான விண்ணப் பத்தை, கடந்த மாதம், இந்தியா முறைப்படி அளித்துள்ளது.

வியன்னா மற்றும் சியோலில் நடக்கவுள்ள, என்.எஸ்.ஜி.,யின் கூட்டங்களில் இந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையே, சீனா வின் ஆதரவுடன் பாகிஸ் தானும், இந்த அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித் துள்ளது.

இந்த அமைப்பில் உறுப்பினராவதற்காக சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளுக்கு நேரடியாக சென்று, பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார். இதைத் தவிர, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டினார்.

இருப்பினும் இந்தியாவின் இந்த முயற்சிக்கு, சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பாகிஸ்தானையும் விண்ணப்பிக்க வைத்தது. 'அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை, அமைப்பில் உறுப்பினராக சேர்க்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விலக்கி கொள்ளக் கூடாது' என, சீனா வலியுறுத்தி வருகிறது.

அணு மின்சக்தி திட்டங்களுக்காக அமெரிக்காவுடன், இந்தியா, 2008ல் செய்துள்ள ஒப்பந்தம்; இதுவரை அணு ஆயுதம் தொடர்பான தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளுக்கு விற்றதில்லை என்ற நன்மதிப்பு; அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குபயன்படுத்துவது போன்ற விஷயங்கள்

இந்தியாவுக்கு சாதகமாக இருந்தாலும், சீனாவின் எதிர்ப்பு, இந்தியாவின் முயற்சிக்கு முட்டுக் கட்டையாக உள்ளது.பலன் கிடைக்குமா?ஆஸ்தி ரியா, நார்வே, அயர்லாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து நாடுகளும் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சீனா மல்லுக்கட்டி நிற்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது இம்மாத இறுதிக்குள் தெரிந்துவிடும்.

சீனா ஏன் எதிர்க்கிறது?: இந்தியாவின் முயற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கூறப்படும் காரணங்கள்:என்.எஸ்.ஜி.,யில் புதிய உறுப்பினர்க ளை சேர்க்க, அமைப்பில் உள்ள, 48 நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும். ஒருவேளை, இந்தியாவும் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்டால், தன்னுடைய ஆதரவுள்ள பாகிஸ்தானை சேர்ப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கலாம் என, சீனா அஞ்சுகிறது.

இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினரானாலும், அணு உலைகள், அதற்கான எரிபொருளை மட்டுமே பெற முடியும். இருப்பினும், சர்வதேச அமைப்பில் இடம்பெற்றுள்ளது என்ற கவுரவம் இந்தியாவுக்கு கிடைக்கும். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இந்த கவுரவம் கிடைக்கக் கூடாது என்பதில் சீனா உறுதியாக உள்ளது.

அதேபோல், தெற்காசியாவில் மிகவும் வலிமையான நாடாக, இந்தியாநட்புறவு பாராட்டி வருகிறது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சீனா மேற்கொள்ளவிருந்த திட்டங்களை, இந்தியா தடுத்து நிறுத்தியதாக சீனா கருதுகிறது.
இவை தான், சீனா எதிர்ப்பு தெரிவிப்பதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்தியாவுக்கு உள்ள வாய்ப்பு: ஒருவேளை, சீனா ஆதரவளித்தால் அதற்காக மிகப்பெரிய விலையை இந்தியா கொடுக்க முயற்சிக்கிறது; இதற் காக, அண்டை நாடுகளுட ன்வேண்டியிருக்கும் சீனாவின் இழுக்கும் இழுப்புக்கு ஏற்ப நடக்க வேண்டியதாகி விடும்.

இதற்கு மாற்றாக, அணுசக்தி துறையில் இந்தியா சொந்தக் காலில் நின்று, புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கலாம். இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அணுசக்தி நிபுணர்கள் கூறுகின்றனர்.

* அழுத்தமேற்றப்பட்ட கனநீர் அணு உலைகளை அமைப்பது மற்றும் செயல்படுத்துவதில் இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது
* அணு உலைகளில் இவை சிறியதாக இருந்தாலும், உலகில் கிடைக்கும் மற்ற வர்த்தக அணு உலைகளைவிட மிகவும் விலை குறைந்தது
* இது அணுசக்தி தேவைப்படும் சிறிய மற்றும் நடுத்தர பொருளாதார நாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்
* எதிர்காலத்தில், இலகுநீர் அணு உலை, ஈனுலைகளை அமைப்பதிலும் ஈடுபட வாய்ப்பாக இவை அமையும்
* இதன் மூலம் எதிர்காலத்தில், என்.எஸ்.ஜி., தானாகவே முன்வந்து இந்தியாவை உறுப்பினராக சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்


தடைகள்:

* அதே நேரத்தில் இந்தியாவுக்கு தடையாக இருப்பது, அதிகளவு உலைகள் தயாரிக்கும் அளவுக்கு போதிய கட்டமைப்பு இல்லை. மற்றொன்று, போதிய நிதி ஆதாரம் இல்லாதது. இதற்கு முக்கிய காரணம்,
அணு மின்சக்தியில் இந்தியா அதிக ஆர்வம் காட்டாததே. கடந்த, 70 ஆண்டுகளில், இந்தியா வில், 21 உலைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ், 20 ஆண்டுகளில், 60 உலைகளை அமைத்துள்ளது. அமெரிக்கா, 20 ஆண்டுகளில், 100 உலைகளை அமைத்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.