Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

வேண்டுமென்றே வருமான வரி கட்டாதவர்களை கைது செய்ய முடிவு


வேண்டுமென்றே வருமான வரி கட்டாதவர்களை கைது செய்ய அல்லது தடுப்புக் காவலில் வைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரி ஏய்ப்பு மற்றும் ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை தடுக்க இந்த ஆண்டு முதல் இந்த நடவடிக்கைகள் எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான வரைவு திட்டங்கள் ஏற்கனவே தயாராகி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நிதித்துறையும் இதற்கான பரிந்துரைகளை அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

யார் வேண்டுமென்றே வரி செலுத்தவில்லையோ அவர்களை கைது செய்ய அல்லது தடுப்புக் காவலில் வைக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

மேலும் அவர்களது பான் எண்கள் பத்திரப் பதிவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். வரி கட்டாமல் சொத்துக்கள் வாங்கி பதிவு செய்ய வரும்போது இவர்கள் கையும், களவுமாக பிடிபடுவார்கள் என்று வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், வரி செலுத்தாதவர்கள் கடன்கள் மற்றும் அரசு மானியங்களை முடக்கவும், கடன் செலுத்தாதவர்களின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.