அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1985-2007 காலகட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டு வீசப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கண்டு பிடிப்பது போலீசாருக்கு சவாலான விஷயமாக அமைந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து ரகசிய துப்பறிவாளர் மூலம் விசாரணை முடுக்கி விடப்பட்டது. இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த லோனி டேவிட் பிராங்கிளின் (வயது 63) என்ற குப்பை சேகரிக்கும் துப்புரவு தொழிலாளிதான் இந்த பாதக செயலில் ஈடுபட்டு வந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பெண்களின் மரபணுக்களுடன் வேறு ஒரு வழக்கில் சிறையில் இருந்த லோனி டேவிட் பிராங்கிளின் மகனிடம் இருந்து பெறப்பட்ட மரபணுவை ஒப்பிட்டு பார்த்தபோது லோனி டேவிட் பிராங்கிளின் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையான பெண்களை குறிவைத்து பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், அந்த காலகட்டத்தில் (1985-2007) 15 வயது சிறுமி உள்பட 10 பெண்களை இது போன்று பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கொலை செய்து உடல்களை வீசியதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கடந்த மாதம் லோனி டேவிட் பிராங்கிளின் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.