இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் மகளிர் ஆணைய தலைவர் சுமர் ஷர்மாவும் இந்த செல்பி புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். ஜெய்பூர் வடக்கு பகுதியில் உள்ள மகிளா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை , ராஜஸ்தான் மகளிர் ஆணைய தலைவர் சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் குர்ஜார் ஆகியோர் பார்வையிட சென்றனர். அப்போது, ஆணைய உறுப்பினர் குர்ஜார் இந்த செல்பியை எடுத்துள்ளார்.
செல்பி எடுத்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மகளிர் ஆணைய தலைவர் சுமன் ஷர்மா தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஷர்மா அளித்த பேட்டியில் . “ பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது ஆணைய உறுப்பினர் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார். அவர் செல்பி எடுக்கும் போது நான் கவனிக்கவில்லை. இது போன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில், வரதட்சணையாக 51 ஆயிரம் வழங்காததால் தனது கணவர் மற்றும் இரு சகோதரர்களால் அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்குள்ளக்கப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கடந்த திங்கள் கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.