மும்பையில் ஓடும் ரெயிலில் பெண் பிரசவித்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ரெயிலில் பிரசவ வலி
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் நேற்று சி.எஸ்.டி. நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவாவை சேர்ந்த குடியா (வயது25) என்ற இளம்பெண் தனது கணவருடன் சயான் மருத்துவமனைக்கு வருவதற்காக ஏறினார். இருவரும் மின்சார ரெயிலின் சரக்கு பெட்டியில் பயணம் செய்தனர். இந்த நிலையில், ஓடும் ரெயிலில் திடீரென குடியாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது.
பெண் குழந்தை பிறந்தது
அந்த பெட்டியில் இருந்த பெண் பயணிகள் அவருக்கு உதவ முன்வந்தனர். அவர்கள் குடியாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதையடுத்து ஓடும் ரெயிலில் குடியாவிற்கு சுகப்பிரசவம் ஆனது. அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த ரெயில் பாண்டுப் ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் ரெயில் நிலைய அதிகாரிக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாய், சேய் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு தாய், குழந்தை இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.