Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

இந்தியாவில் சாலை விபத்துகளில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலி நிதின் கட்காரி தகவல்


இந்தியாவில் 2015-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ‘‘இந்த அறிக்கையின் படி இந்தியாவில் ஒரு நாளில் ஏற்படக்கூடிய சாலைவிபத்துகளில் சராசரியாக 400 பேர் பலியாவதாக தெரியவந்து உள்ளது. மேலும் ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில் 17 பேர் கொல்லப்படுவதாகவும், இது போன்ற சாலை விபத்துகளில் பலியாகும் நபர்களில் 54 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் இந்த அறிக்கையின் மூலம் தெரிகிறது. இது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியதாகும்’’ என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ‘‘இவற்றை குறைக்க கடந்த 2 ஆண்டுகளில் நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதோடு, ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் எடுத்துள்ளோம். ஆனால் அவை பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இந்த சூழ்நிலையை மாற்ற நாங்கள் உறுதியோடு இருக்கிறோம், நான் இதை அனுமதிக்கமாட்டேன் என் இதயம் முழுவதும் வலியால் நிறைந்திருக்கிறது’’ என தெரிவித்தார்.

77.1 சதவீத சாலை விபத்துகள் டிரைவரின் தவறுதலால்தான் நடப்பதாக கூறிய அவர் மோசமான சாலைகளும் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் முந்தைய அரசால் அமைக்கப்பட்ட தரமற்ற பாலங்களாலும், சாலைகளாலும் அதிக விபத்துகள் ஏற்படுவதாக நிதின் கட்காரி குற்றம் சாட்டினர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.