Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

டெல்லியில் 5 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 கோடி அபராதம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்ததால் நடவடிக்கை


டெல்லியில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 43 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, 1960-1990 ஆண்டுகளுக்கு இடையே சலுகை விலையில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால் அந்த நிபந்தனைகளின்படி நடந்து கொள்ளாததை தொடர்ந்து 5 முன்னணி ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 கோடி அபராதம் விதித்து டெல்லி மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து டெல்லி மாநில அரசின் சுகாதார துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் ஹேம் பிரகாஷ் கூறுகையில், “ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்படி நடந்துகொள்ளவில்லை என்பதால் 5 ஆஸ்பத்திரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அவை வழங்கிய பதில்கள் திருப்திகரமாக இல்லை. எனவேதான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “டெல்லி ஐகோர்ட்டு 2007-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அபராதம் போடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த அபராத தொகையை அந்த ஆஸ்பத்திரிகள் அடுத்த மாதம் 9-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும், அப்படி செலுத்த தவறினால் அவற்றின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.