Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

சென்னை காசிமேட்டில் குழந்தைகளுக்கு சூடுபோட்டு பிச்சை எடுத்த தாய் பிடிபட்டார் 4 குழந்தைகள் மீட்பு


சென்னை காசிமேட்டில் குழந்தைகளுக்கு சூடுபோட்டு பிச்சை எடுத்த தாய் பிடிபட்டார். 4 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

குழந்தைகளுடன் பிச்சை
சென்னை காசிமேடு, சூரிய நாராயணா தெருவில் கடந்த சில நாட்களாக ஒரு பெண் 2 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியினர் குழந்தைகளை வைத்து பெண் பிச்சை எடுப்பதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த ரவீனா(வயது 30) என்பதும், இவர் சில வாரங்களுக்கு முன்பு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தனது மகள் ரூமஸ்ரீ(8), மகன் கரண்(3) ஆகியோரை பயன்படுத்தி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

குழந்தைகளுக்கு சூடு
அப்போது குழந்தைகள் மீட்பு பிரிவு போலீசார் குழந்தைகளை அழைத்து சென்றுவிட்டனர். அந்த குழந்தைகள் காசிமேட்டில் உள்ள காப்பகத்தில் இருப்பதாக தகவலறிந்து காசிமேடு பகுதிக்கு வந்து தனது மற்ற 2 குழந்தைகளுடன் பிச்சை எடுத்துவந்ததாக தெரிவித்தார்.

அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் தொடர்பு கொண்டபோது ரவீனா குழந்தைகளுக்கு சூடுபோட்டு பிச்சை எடுக்க வைத்ததால் குழந்தைகளை மீட்டு ஒரு குழந்தையை தியாகராய நகரில் உள்ள காப்பகத்திலும், மற்றொரு குழந்தையை புரசைவாக்கத்தில் உள்ள காப்பகத்திலும் ஒப்படைத்ததாக தகவல் கிடைத்தது.

4 குழந்தைகள் மீட்பு
தற்போது மீட்கப்பட்ட 3 மாத குழந்தை மற்றும் சுல்தான்(1) ஆகியோரை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசார் மீட்டு தியாகராய நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 4 குழந்தைகளும் தன்னுடையது தான் என ரவீனா தெரிவித்தாலும், அவருடைய நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதால் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.