Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

நான் முதுகெலும்பற்றவன் இல்லை: கேரளாவில் பதவி பறிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியின் பேஸ்புக் பதிவு


நான் முதுகெலும்பற்றவன் இல்லை என்று கேரளாவின் புதிய அரசால் பதவி பறிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சென்குமார் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதல்–மந்திரியாக பினராயி விஜயன் பதவியேற்று உள்ளார். இதை தொடர்ந்து ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சென்குமார் அந்த பதவியில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சென்குமாருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தனது பதவி பறிபோவதற்கு முதல் நாள் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

சென்குமாரின் பேஸ்புக் பதிவில் “கேரள போலீஸ் எஸ்.பி.சி.யாக இது என் கடைசி பேஸ்புக் பதிவாக இருக்கலாம். இந்த பக்கம் மக்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் சில நெருக்கடியால் இதை தொடர முடியாமல் போகலாம். உங்களுடைய ஆலோசனைகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய 35 ஆண்டுகால காவல்துறை பணியில் நேர்மை, நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளேன். நான் முதுகெலும்பற்றவன் இல்லை. நான் பதவிகளுக்காக யாரையும் அணுகி கெஞ்சியது இல்லை. நான் எப்போதும் பாரபட்ச மற்றும் மற்றும் நியாயமான முறையிலும் இருக்க முயற்சித்தேன்.

இந்த பொறுப்பில் இருந்து முழு திருப்தியுடன் வெளியேறுகிறேன். நான் சட்டவிரோதமாக செய்யும்படி எந்த அதிகாரியையும் கோரியது கிடையாது. நிரபராதிகளை கைது செய்தது இல்லை, போலியான ஆதாரங்களை உருவாக்கியது இல்லை. இதுதான் ஒரு போலீஸ் அதிகாரிக்கு கிடைக்கும் அதிகப்பட்ச மனநிறைவு என்று நினைக்கிறேன். நான் எப்போதும் சட்ட விரோதமான குறுக்கீடுகளை எதிர்த்தே வந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.