Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் 20 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 20 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 20 செயற்கைகோள்களை அனுப்பி இந்தியா சாதனை படைத்து உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா உள்பட 17 வெளிநாட்டு செயற்கைகோள்களையும், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 1.5 கிலோ எடை கொண்ட ‘சத்தியபாமா சாட்’, புனே என்ஜினீயரிங் கல்லூரியின் ‘ஸ்லயம்’ மற்றும் ‘கார்டோ சாட்-2’ செயற்கைகோள்கையும் சுமந்து சென்றது.

முதன்மை செயற்கைகோளான ‘கார்டோ சாட்-2’ பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைகோளின் எடை 727.5 கிலோ. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். பி.எஸ்.எல்.வி. சி-34 நவீன மோட்டார் கருவிகள் பொருத்தப்பட்ட எக்ஸ்.எல். வகையை சார்ந்த 14-வது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர்.

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 20 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. ஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து அனுப்பப்பட்டன. இதுவே இஸ்ரோவின் சாதனையாக இருந்தது.
 இந்த சாதனையை தானே முறியடிக்கும் விதமாக இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி.-34 ராக்கெட்டில் 20 செயற்கைகோள்களை இணைத்து அனுப்பிஉள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.