புதுவையில் சொத்து பிரச்சினையில் மனைவியை கணவன் ஓடஓட விரட்டி படுகொலை செய்தார்.
வீட்டுமனை
புதுவை அய்யங்குட்டிபாளையம் அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தாயி. இவரது மூத்த மகள் மைதிலி என்ற முனியம்மாள் (வயது 37). இவருக்கும் அதே பகுதியில் உள்ள அமைதி நகரை சேர்ந்த உறவினரான கட்டிட தொழிலாளி ஆறுமுகத்துக்கும் (47) கடந்த 12வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு பவானி (12), காவ்யஸ்ரீ (7) என்ற 2மகள்கள் உள்ளனர். திருமணத்துக்குப்பின் ஆறுமுகம் வெளிநாட்டுக்கு சென்று பணிபுரிந்தார். அவர் தனது மனைவிக்கு அவ்வப்போது பணம் அனுப்பினார். அந்த பணத்தை சேமித்து வைத்த மைதிலி தனது வீட்டருகே புதியதாக வீட்டுமனை ஒன்றை தனது பெயருக்கு வாங்கியுள்ளார்.
பிரிந்து வாழ்ந்தனர்
இந்தநிலையில் ஆறுமுகம் வெளிநாட்டிலிருந்து புதுச்சேரி திரும்பினார். புதுவை வந்தநிலையில் மனைவியின் நடத்தை தொடர்பாக ஆறுமுகம் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆறுமுகம் தனது மனைவி மைதிலியிடம் வீட்டுமனையை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் மைதிலி அதற்கு மறுத்துவிட்டார். இதன் காரணமாக தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறினால் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த சொத்து பிரச்சினை தொடர்பாக மகளிர் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் அழைத்து பேசினாலும்கூட சமாதானம் ஏற்படவில்லை.
விரட்டி சென்றார்
இந்தநிலையில் நேற்று காலை மைதிலி தனது மகள்களை அந்த பகுதியில் உள்ள ஒரு டியூசன் சென்டருக்கு கொண்டு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் ஆறுமுகத்தின் வீட்டு அருகே வந்தபோது ஆறுமுகம் ஒரு கத்தியுடன் மைதிலியை நோக்கி பாய்ந்துவந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மைதிலி ஓட்டம் பிடித்தார்.
ஆனாலும் ஆறுமுகம் மைதிலியை விரட்டி சென்று கழுத்து, கையில் கத்தியால் வெட்டினார். இருந்தபோதிலும் உயிர் பிழைக்க ஓடிய மைதிலி தனது வீட்டு அருகே சென்றபோது ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தார்.
கழுத்தை அறுத்தார்
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆறுமுகம் கத்தியால் மைதிலியின் கழுத்தை அறுத்தார். இதில் மைதிலி துடிதுடித்து பரிதாபமாக செத்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கணவன் சிக்கினார்
இந்த கொலை குறித்து அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொலையாளியான மைதிலியின் கணவர் ஆறுமுகம் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.