மகாராஷ்டிராவில் கணவர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தலால் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கத்யசிவடாய் கிராமத்தினை சேர்ந்தவர் ரஞ்சனா காஷிநாத் தோம்பிரி (வயது 26).
இவரது கணவர் காஷிநாத் பாவ் தோம்பிரி. இவர்கள் இருவரும் முர்பாத் பகுதியில் கணவரது உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 3 மகள்கள். இந்நிலையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க முடியாதவர் என கூறி அந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியுள்ளனர். அதனுடன் வரதட்சணை கேட்டும் துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு இந்த துன்புறுத்தல் தொடர்ந்துள்ளது. இதனால் வருத்தத்திற்கு உள்ளான ரஞ்சனா கிணற்றுக்குள் குதித்து விட்டார். இதனை அடுத்து காஷிநாத் (வயது 26), பகிபாய் பாவ் தோம்பிரி (வயது 58), வசந்த் பாவ் தோம்பிரி (வயது 28) மற்றும் லதா வசந்த் தோம்பிரி (25) ஆகிய 4 பேர் மீது பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 498-ஏ (கணவர் அல்லது அவரது உறவினரால் ஒரு பெண்ணுக்கு கொடுமை இழைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.