Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 18, 2016

குழந்தைகளுக்கு தவறாக பாடம் சொல்லி கொடுத்துவிட்டு, வேண்டுமென்றே செய்ததாக சமாளிக்கும் குஜராத் அமைச்சர்


குஜராத் அமைச்சர் சங்கர் சவுத்ரி பள்ளி குழந்தைகளுக்கு தவறாக பாடம் சொல்லி கொடுத்துவிட்டு, வேண்டுமென்றே செய்ததாக சமாளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் நகர்ப்புற வீட்டுவசதி, சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சங்கர் சவுத்ரி. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சமீபத்தில் திஷா பகுதியில் அமைந்திருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பி வராமல் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறேன் என்று கூறி கரும்பலகையில் யானை என்பதை ஆங்கிலத்தில் "E-L-E-P-H-E-N-T" என்று எழுதியுள்ளார். Elephant என்பதுதான் சரி. ஆனால் a போட வேண்டிய இடத்தில் e என்று எழுதிவிட்டார்.

இதை யாரோ ஒருவர் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட, அது தீயாக பரவிவிட்டது. இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான சங்கர் சவுத்ரி, மாணவர்களின் அறிவை சோதிப்பதற்காக இப்படி செய்ததாக சமாளித்து வருகிறார்.

சங்கர் சவுத்ரி சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. இவரது எம்.பி.ஏ. பட்டம் போலியானது என்று சர்ச்சை ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றது. குஜராத் சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.