மால்வாணியில் பாட்டி, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறுவன், சிறுமியின் தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் தம்பதி
மும்பை மால்வாணி, கேட் எண்-6-ல் உள்ள நியூ கலெக்டர் காலனி, அம்பூஜ்வாடி குடிசைப்பகுதியை சேர்ந்த பெண் பப்ளிசாவ்(வயது50). இவரது மகள் துள்சி. இவர் இஸ்மாயில் சேக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன்(13) என்ற மகனும், சானியா(8) என்ற மகளும் இருந்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துள்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
துள்சி இறந்த ஒரு வருடத்திலேயே இஸ்மாயில் சேக் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து பப்ளிசாவ் பேரக்குழந்தைகள் இருவரையும் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.
3 பேர் கொலை
வழக்கமாக பப்ளிசாவ் காலையிலேயே தண்ணீர் பிடிப்பதற்காக எழுந்து விடுவது வழக்கம். ஆனால் நேற்று காலை 9 மணியாகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது பேரப்பிள்ளைகளும் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பப்ளிசாவின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவரது வீட்டு கதவின் தாழ்ப்பாள் வெளிப்பக்கமாக போடப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பப்ளிசாவும், அவரது பேரக்குழந்தைகள் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறி கூச்சல் போட்டார். இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்ததும் மால்வாணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பகவதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து பிரச்சினை
அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த யாரோ மர்மஆசாமி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 3 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் வீட்டில் இருந்த நகை, பணம் அப்படியே இருந்ததால் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த கொடூர கொலைகள் அரங்கேற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மருமகன் இஸ்மாயில் சேக்கின் பெயரில் உள்ள வீட்டை பப்ளிசாவ் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது பெயரில் மாற்றி எழுதி இருந்ததும், தற்போது இஸ்மாயில் சேக் பெயரில் உள்ள ஒரு மீன்கடையை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டி அவரை வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது.
விசாரணை
இது தொடர்பாக பப்ளிசாவுக்கும், இஸ்மாயில் சேக்கின் இரண்டாவது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே இந்த சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் இஸ்மாயில் சேக்கை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.