Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை ஆட்டோ டிரைவர் கைது


பரமக்குடியில் அரசு பள்ளி ஆசிரியர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தகராறு
பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது முதல்மனைவி ஜீவா மனைவி. 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராஜ்குமார் 2–வதாக ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வந்தார்.

முதல் மனைவியான ஜீவாவின் சகோதரர் கீழக்காவனூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உமாபதி(43) என்பவருக்கும் ராஜ்குமாருக்கும் இடையே அடிக்கடி வீடுகட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

அது தொடர்பாக ராஜ்குமார், நகராட்சி உள்பட அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்து வந்தாராம். இதன்காரணமாக ராஜ்குமாருக்கும், உமாபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கைது

இந்தநிலையில் பொன்னையாபுரம் ரெயில்வே கேட் அருகே அவர்களிடையே மீண்டும் தகராறு உருவானது. அப்போது ஆத்திரமடைந்த உமாபதி தான் வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுப்பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் உமாபதியை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி மேலக்காவனூரில் பதுங்கி இருந்த உமாபதியை பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.