புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிப்டினுள் பொதுமக்களும், நோயாளிகளும் சிக்கி தவித்தனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 800க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்த லிப்ட் வசதி உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் உள்ள முதலாவது மாடி, 2–வது மாடி, 3–வது மாடிக்கு செல்ல இந்த லிப்டை பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள், நோயாளிகள் தவிப்பு
இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்களும், நோயாளிகளும் சென்ற லிப்ட் திடீரென முதல் மாடியில் பழுது ஏற்பட்டு நின்று விட்டது. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் வெளியே வர முடியாமல் லிப்டின் உள்ளேயே சிக்கி தவித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் லிப்டின் உள்ளே இருந்து கூச்சலிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்து சென்று லிப்டை சரி செய்தனர். அதன் பின்னரே லிப்டினுள் சிக்கி இருந்த பொதுமக்கள் வெளியே வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.