உள்நாட்டு விமான பயணத்தின்போது பயணிகள் 15 கிலோ வரை உடமைகளை கட்டணம் இன்றி எடுத்துச்செல்ல விமான நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. ஏர் இந்தியா மட்டும் 23 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கிறது.
இதற்கு அதிகமாக உடமைகளை பயணிகள் எடுத்து செல்கிறபோது ஒரு கிலோவுக்கு ரூ.300 வீதம் வசூலிக்கப்படுகிறது. இது அதிகம் என பயணிகள் குறை கூறி வந்தனர். இது தொடர்பாக அரசின் கவனத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.
இதையடுத்து விமான பயணிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இனி இலவச அனுமதியை கடந்து எடுத்து செல்கிற உடமைகளுக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் தற்போதைய ரூ.300–க்கு பதிலாக ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படும். இந்த சலுகை 20 கிலோ வரையில்தான்.
அதற்கு அதிகமான எடை கொண்ட உடமைகளை பயணிகள் எடுத்து வருகிறபோது அதற்கு விமான நிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம்.
இந்த கட்டண குறைப்பு குறித்த தகவல்களை வெளியிட்ட சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் சதியவதி, இது வரும் 15–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.