Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் பிரான்சின் நீதிமன்றம் அனுமதி


இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்சின் தலைமை  நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்பெயினை சேர்ந்த மரியானா கோமெஸ் தூரி  என்ற பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார். இந்நிலையில் தனது கணவரின் விந்து அணுக்களை பாதுகாத்து  வைத்திருந்த மரியானா அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவர் விரும்பினார்.

இவர்கள் இருவரும் பாரிசில் வாழ்ந்த வந்த போது இது தொடரபான பிரான்சின் சட்டம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர். பிரான்சில் செயற்கை கருவூட்டல் என்பது மலட்டு ஜோடிகளுக்கு மட்டுமே நடைமுறையில் அதிகம் உள்ளது. இதனால் இவரின் விருப்பத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.

இந்நிலையில் மரியானா சட்டங்கள் ஒருவரின் உரிமைகளை பறிக்க கூடாது என்று கூறி மரியானா மேல்முறையீடு செய்தார்.இதனை ஒரு சிறப்பு வழக்காக எடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.