Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

இந்தியா உள்பட 5 நாடுகளில் 55% அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன


உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த பயங்கரவாதம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜஸ்டின் சிபிரெல் என்பவர் கடந்த 2015ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகளவில் நடத்தப்பட்ட நாடுகள், இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், 2015ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதிலும் உள்ள 92 நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதாக ஜஸ்டின் சிபிரெல் தெரிவித்துள்ளார்.

இந்த ஒட்டுமொத்த தாக்குதல்களில் அதிகளவில், அதாவது 55 சதவிகிதத்திற்கும் அதிகமான தாக்குதல்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய 5 நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

92 நாடுகளில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களில் அதிகளவில், அதாவது 74 சதவிகித உயிரிழப்புகள் ஈராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

எனினும். 2014ம் ஆண்டில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களை ஒப்பிடுகையில், 2015ல் சுமார் 13 சதவிகிதம் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது.

அதேபோல், 2014ம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 2015ம் ஆண்டில் 14 சதவிகித உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

மேலும், சர்வதேச அளவில் மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக ஐ.எஸ் அமைப்பு விளங்கி வருவதாக ஜஸ்டின் சிபிரெல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.