பாகிஸ்தானில் பிரபல கவாலி பாடகர் அம்ஜத் சப்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் சப்ரி சகோதர்கள் குழுமத்தை சேர்ந்த பிரபல கவாலி பாடகரான அம்ஜத் சப்ரி(வயது 45), இன்று பிற்பகல் கராச்சியில் உள்ள லியாகுவாதாபாத் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அம்ஜத் சப்ரியின் கார் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அம்ஜத் சப்ரி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ஜத் சப்ரி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சப்ரி சகோதரர்கள் குழுமம் குலாம் பரித் சப்ரி மற்றும் அவரது இளைய சகோதர் ஹாஜி மக்பூல் அகமது சப்ரி ஆகியோரால் துவங்கப்பட்டது. குலாம் சப்ரியின் மகன் அம்ஜத் சப்ரி ஆவார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.