Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2016

தாதாவாகி பணம் சம்பாதிக்கும் ஆசையில் துப்பாக்கியுடன் மும்பை வந்த என்ஜினீயரிங் மாணவர் கைது


தாதாவாகி பணம் சம்பாதிக்கும் ஆசையில் துப்பாக்கியுடன் மும்பை வந்த என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கியுடன் வாலிபர்
மும்பை தாதர் பகுதியில் சம்பவத்தன்று சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் சுற்றிக்கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குற்றப்பிரிவு போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அவரது பையை சோதனை போட்டனர். அப்போது அதில் துப்பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

என்ஜினீயரிங் மாணவர்
இதில் அந்த வாலிபர் உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கார்ச்சனா பகுதியை சேர்ந்த ஜித்தேந்திரா(வயது 23) என்பது தெரியவந்தது. இவர் வாரணாசியில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். படிப்பில் நாட்டமில்லாத ஜித்தேந்திரா குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பினார்.

இதுகுறித்து அவர் நவிமும்பையில் வசித்து வரும் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது அந்த நண்பர் மும்பைக்கு ஒரு துப்பாக்கி வாங்கிக்கொண்டு வா, எப்படி பெரிய தாதாவாகி பணம் சம்பாதிக்கலாம் என்பது குறித்து உனக்கு சொல்லி தருகிறேன் என ஜித்தேந்திராவிடம் கூறினார். இதையடுத்து ஜித்தேந்திரா உத்தரபிரதேசத்தில் சட்டவிரோதமாக ரூ.30 ஆயிரத்திற்கு துப்பாக்கி வாங்கி கொண்டு மும்பை வந்துள்ளார்.

பிடிப்பட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.