பல்லாரியில், 2 மகள்களை கொன்று விட்டு மின்வாரிய உதவி என்ஜினீயர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார். அவர், உயர் அதிகாரிகள் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 மகள்களை கொன்று தற்கொலை
பல்லாரி டவுன் அருகே கவுல் பஜார் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 37). இவர் பல்லாரி மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரத்னா (30). இவர்களுக்கு தனுஸ்ரீ(6) மற்றும் பாவனி(4) என்ற 2 மகள்கள் இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் தனது மகள்கள் தனுஸ்ரீ மற்றும் பாவனியை நாகராஜ் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் நாகராஜிம், ரத்னாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கவுல் பஜார் போலீசார் விரைந்து சென்று நாகராஜ் உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நாகராஜ் தனது மகள்கள் தனுஸ்ரீ, பாவனி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்திருந்ததும், பின்னர் நாகராஜிம், அவரது மனைவி ரத்னாவும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்டதும் தெரியவந்தது.
உயர் அதிகாரிகள் தொல்லை
இந்த நிலையில், நாகராஜ் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசார் கையில் சிக்கியது. அதில், தன்னுடைய இந்த முடிவுக்கு உயர் அதிகாரிகள் தொல்லை கொடுத்தது தான் காரணம் என்று நாகராஜ் எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து கவுல் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் நாகராஜிக்கு உயர் அதிகாரிகள் தொல்லை கொடுத்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பல்லாரி டவுனில் நேற்று பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.