டெல்லியில் வசித்துவரும் பிரபல பெண் எழுத்தாளர் தெருவோரங்களில் வசிக்கும் சில பிள்ளைகளை உணவு அருந்த அழைத்துச் சென்றபோது அவர்களுக்கு உணவு பரிமாற மறுத்த உணவகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் வசித்து வருபவர் சோனாலி ஷெட்டி. பிரபல பெண் எழுத்தாளரான சோனாலி ஷெட்டியின் கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சோனாலி, தனது வீட்டின் அருகாமையில் தெருவோரங்களில் வசிக்கும் சிறுவர்களுக்கு கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் விருந்தளிக்க முடிவு செய்தார்.
இதையடுத்து, 8 பிள்ளைகளுடன் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் அங்குள்ள ஷிவ் சாகர் ரெஸ்டாரண்ட் என்ற பிரபல உணவகத்துக்கு சென்றார். டேபிளில் அமர்ந்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை ஆர்டர் செய்தபோது, தெருவோர பிள்ளைகளுக்கு உணவு பரிமாற முடியாது என மறுத்துவிட்ட ஹோட்டல் நிர்வாகிகள், முதலில் அந்த பிள்ளைகளை அழைத்துகொண்டு வெளியே போகுமாறு கூறி சோனாலியை விரட்டி விட்டனர்.

ஹோட்டல் நிர்வாகத்தின் இந்த தீண்டாமையை எதிர்த்து நள்ளிரவு 12 மணிவரை சோனாலி ஷெட்டி, ஷிவ் சாகர் ரெஸ்டாரண்ட் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை அறிந்து அங்குவந்த போலீசார் ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர். நீங்கள் இந்த பிள்ளைகளை எல்லாம் வேறொரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுக்க வேண்டியது தானே? என்று போலீசார் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் ஊடகங்களின் வாயிலாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவின் கவனத்துக்கு சென்றது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்து ‘பூஷ்வா’ மனப்பான்மையுடன் செயல்பட்ட அந்த ஹோட்டல் நிர்வாகத்தின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தி 24 மணிநேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி டெல்லி துணை மாஜிஸ்திரேட்டுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, இன்று காலை அந்த ஹோட்டலுக்கு சென்ற துணை மாஜிஸ்திரேட், அங்குள்ள நிர்வாகிகள் மற்றும் சர்வர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவர் சமப்பிக்கவுள்ள விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அந்த ஹோட்டலின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எழுத்தாளர் சோனாலி ஷெட்டி, ‘இன்றுமாலை அதே பிள்ளகளுடன் நான் அந்த ஹோட்டலுக்கு செல்வேன். மற்றவர்களைப் போல் அந்த பிள்ளைகளுக்கு அவர்கள் உணவு பரிமாறுவதுடன் ஹோட்டல் நிர்வாகம் அவர்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என சவால் விட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.