Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

துபாய் விமான நிலையம் ஒரு மணி நேரம் மூடல்; 22 விமானங்கள் திருப்பிவிடப்பட்டது


துபாய் விமானநிலைய பகுதியில் சனிக்கிழமை அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானம் பறந்ததால் 69 நிமிடங்கள் மூடப்பட்டது என்றும் 22 விமானங்கள் திருப்பிவிடப்பட்டது.

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலைய பகுதியில் நேற்று அங்கீகாரம் பெறாத ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது. இதன்காரணமாக பாதுகாப்பு காரணங்களையொட்டி, துபாய் சர்வதேச விமான நிலையம் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.36 மணி முதல் மதியம் 12.45 மணி வரை மூடப்பட்டது. 22 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இது குறித்து துபாய் விமான நிலைய தலைமை அதிகாரி பால் கிரிபித்ஸ் குறிப்பிடும்போது, ”பல்லாயிரக்கணக்கான பயணிகளின் பயணங்கள் பாதிக்கப்பட்டு விட்டன.

இது மிகவும் தீவிரமான ஒரு சம்பவம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டோம். ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து விமான நிலைய பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறி ஆளில்லா விமானம் பறந்தது சட்டவிரோத செயல் ஆகும்” என்று கூறினார். இச்சம்பவத்தினால் அங்கு விமானங்களின் சேவையில் காலதாமதம் ஏற்பட்டது. விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தை சுற்றிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.