Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

காதலன் கண் எதிரே கல்லூரி மாணவியை கற்பழித்த 2 பேருக்கு 20 ஆண்டு ஜெயில் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


காதலன் கண் எதிரே கல்லூரி மாணவியை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கல்லூரி மாணவியின் காதல்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிப்பவர் சாரதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். சாரதா தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் மாணிக்கராஜ் என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது சாரதா 2009-ம் ஆண்டு காதலன் மாணிக்கராஜுடன் அருப்புக்கோட்டை நேர்வழிச்சாலை ரெயில் பாதை அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(30), அடைக்கலம் என்கிற கத்தாளை(31) ஆகிய 2 பேரும் அங்கு வந்து, கட்டிட வேலைக்கு பயன்படும் இரும்புக்கரண்டியை காட்டி மிரட்டி காதல் ஜோடியை விசாரித்தனர்.

கற்பழிப்பு

பின்னர் பாலகிருஷ்ணனும், அடைக்கலமும் சேர்ந்து சாரதா அணிந்திருந்த 1½ பவுன் தங்கச் சங்கிலி, அரைபவுன் தோடு ஆகியவற்றை பறித்ததோடு அவரை யாரும் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று கற்பழித்தனர். இச்சம்பவம் காதலன் மாணிக்கராஜ் கண் முன்பே நடந்தது. இதுகுறித்து மாணவி அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, பாலகிருஷ்ணன், அடைக்கலம் ஆகிய இருவரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்து£ர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ராஜலட்சுமி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

20 ஆண்டு ஜெயில்

குற்றம்சாட்டப்பட்ட பாலகிருஷ்ணன், அடைக்கலம் ஆகிய 2 பேருக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 394-ன்படி குற்றத்திற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், பிரிவு 376(இ)ன் படியான குற்றத்திற்கு 2 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை நலனுக்காக வழங்கவும் அவர் உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.