Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 9, 2016

10 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்த 50 வயது முதியவர் கைது


பாகிஸ்தானின் ஜகோபாபாத்தில் கடந்த சனிக்கிழமை 50 வயது முதியவர் ஒருவர் 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 50 வயது முதியவரை கைது செய்தனர்.

சிறுமியின் தந்தையும் திருமணம் நடத்தி வைக்க இருந்த மத குருவும் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் 50 வயது முதியவர் 10 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள அவரது தந்தையிடம் ரூ 4 லட்சம் வரை வழங்கி உள்ளார் என தெரியவந்து உள்ளது.

பாகிஸ்தானில் 15 வயதிற்குள் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது 3 சதவீதம் நடைபெறுகிறது. 18 வயதிற்குள் திருமணம் செய்து வைப்பது 21 சதவீதம் நடைபெறுகிறது.

சிறுமிகள்  திருமணம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவை பாகிஸ்தானின் வலிமை உள்ள மத அமைப்புகள் தடுத்து விட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.