சென்னையை சேர்ந்த 30 வயதான இளம் தொழில் அதிபர் உமேஷ் சச்தேவ் என்பவரை அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை கவுரவித்துள்ளது. ‘தங்கள் படைப்புகள் மூலம் உலகத்தை மாற்றி வருபவர்கள்’ என்ற 10 பேர் அடங்கிய பட்டியலை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், உமேஷ் சச்தேவ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அவர் தன்னுடைய கல்லூரி நண்பர் ரவி சரோகியுடன் சேர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யை தலைமையிடமாக கொண்ட ‘யுனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்தை 2008-ம் ஆண்டு தொடங்கினார். உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதன் தயாரிப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
உமேஷ் சச்தேவ் உருவாக்கிய சாப்ட்வேர், தொலைபேசியில் ஒரு முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், அதனை மறுமுனையில் கேட்பவரால் புரிந்து கொள்ளும்வகையில் மாற்றக்கூடியது. இதன்மூலம், அவசரகால உதவி மையங்களை தொடர்பு கொள்ளும் பொதுமக்கள், தங்கள் தாய்மொழியிலேயே பேசி, ஆன்லைன் வங்கி சேவை, வானிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்.
25 உலக மொழிகளிலும், 150 உள்ளூர் பேச்சு வழக்குகளிலும் பேசி பொதுமக்கள் தகவல்களை பெற இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது. ஆங்கிலம் தெரியாத மக்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த சாதனைக்காகவே, உமேஷ் சச்தேவ் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.