சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் ஆஸ்திரேலியாவிடம் 1–3 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்து வெள்ளிப்பதக்கம் வென்றது. பெனால்டி ஷூட்–அவுட்டில் நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் பரபரப்பு ஏற்பட்டது.
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி
6 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா அணிகள் மோதின.
வழக்கமான 60 நிமிட நேரத்தில் இரு அணிகளின் தடுப்பு ஆட்டக்காரர்களும், கோல்கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் கோல் எதுவும் விழவில்லை. 19–வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை அந்த அணியின் பிளேக் கோவர்ஸ் கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தார். 3–வது கால் பகுதியில் சிறிது நேரம் ஆஸ்திரேலிய அணி 9 வீரர்களுடன் ஆடும் நிலைக்கு ஆளானது. ஆனால் அந்த வாய்ப்பை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
ஆஸ்திரேலியா ‘சாம்பியன்’
ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய பெனால்டி ஷூட்–அவுட் முறை கையாளப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி 3–1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 14–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணியில் ஹர்மன்பிரீத்சிங் மட்டும் கோல் அடித்தார். மற்ற இந்திய வீரர்களான உத்தப்பா, சுனில், சுரேந்தர்குமார் ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணாக்கினார்கள். ஆஸ்திரேலிய அணியில் அரன் சலேவ்ஸ்கி, டேனியல் பியாலே, சிமோன் ஒர்ஷார்ட் ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கினார்கள். டிரென்ட் மிட்டோன் அடித்த பந்தை இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்தார்.
சர்ச்சைக்குரிய பெனால்டி
ஆஸ்திரேலிய அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது ஆஸ்திரேலிய வீரர் டேனியல் பியாலே பெனால்டி வாய்ப்பை கோலாக்க முயற்சித்த போது தரையில் விழுந்த நிலையில் இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்தார். பந்து கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்சின் இரண்டு கால்களுக்கு இடையில் சிக்கியது. அதனை தன்வசப்படுத்தி கோல் அடிக்க டேனியல் பியாலே முயற்சித்தார். ஆனால் அது முடியவில்லை.
பந்து கால்களுக்கு இடையில் சிக்கியதால் தன்னால் கோல் அடிக்க முடியவில்லை. எனவே தனக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று டேனியல் பியாலே நடுவரிடம் அப்பீல் செய்தார். இதைத்தொடர்ந்து வீடியோ ஆய்வு செய்து பார்க்கப்பட்டு டேனியல் பியாலேக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஒல்ட்மான்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

முடிவு அறிவிப்பதில் தாமதம்
மீண்டும் ஆஸ்திரேலிய அணி வீரர் டேனியல் பியாலேவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டி அமைப்பு குழு அதிகாரிகளிடம் இந்திய அணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் போட்டியின் முடிவை அறிவிப்பதில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு கலைந்து சென்று விட்டனர். கோப்பையும் மைதானத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது. முடிவில் உள்ளரங்கில் பரிசளிப்பு விழா நடந்தது.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 1982–ம் ஆண்டில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்று இருந்ததே இதுவரை இந்திய அணியின் சிறப்பான நிலையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கி இந்தியா எதிர்ப்பு
இந்த சர்ச்சை குறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரேந்தர் பத்ரா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் தவறு இழைத்து விட்டனர். சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி போன்ற பெரிய போட்டிக்கு நீங்கள் நியமிக்கப்படும் நடுவர்களின் தரம் இவ்வளவு தானா?. பெனால்டி ஷூட்–அவுட் முயற்சி 14 வினாடிகளுக்கு மேலாக சென்றது. பிறகு மறு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களது தவறை மறைக்க தற்போது ஸ்ரீஜேஷ் பேடில் பட்டு பந்து உருண்டது என்று காரணம் சொல்கின்றனர்’ என்றார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இது வழக்கத்துக்கு மாறான முடிவாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட்டு இருக்க வேண்டும். எங்களது எதிர்ப்பு ஆட்டத்தின் முடிவினால் அல்ல. முக்கிய தொடர்களில் ஏற்கனவே பின்பற்றிய நடைமுறையை அமல்படுத்தி இருக்க வேண்டும். இதேபோல் ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் நடந்தால் ஏற்படும் சங்கடத்தை கற்பனை செய்து பாருங்கள்’ என்று கூறினார்.
ரொக்கப்பரிசு
வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி உள்பட பலர் டுவிட்டார் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு, ஆக்கி இந்தியா அமைப்பு ரொக்கப்பரிசு அறிவித்துள்ளது. அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளருக்கு தலா ரூ.2 லட்சமும், பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.