அசாமில், லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட மண்டல வன அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.66 லட்சம் சிக்கியது. புலித்தோல் மற்றும் யானை தந்தங்களும் கைப்பற்றப்பட்டன.
கையும், களவுமாக பிடிபட்டார்
அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் மண்டல வன அதிகாரியாக பணியாற்றி வருபவர் மொகித் சந்திர தலுக்தர். இவர் 2 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் வந்தன. இதனால் அவரை அசாம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.
நேற்று காட்டில் சட்டபூர்வ ஆவணங்களுடன் 3 லாரிகள் வந்தன. அவற்றை வழிமறித்து மொகித் சந்திர தலுக்தர், லஞ்சம் கேட்டார். லாரிகளில் இருந்தவர்கள் ரூ.30 ஆயிரத்தை கொடுத்தபோது, அதை தலுக்தர் வாங்கினார்.
அப்போது, மறைந்திருந்து கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தலுக்தரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ரூ.66 லட்சம் பறிமுதல்
அதைத் தொடர்ந்து, தலுக்தரின் அதிகாரபூர்வ இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கட்டு கட்டாக ரூ.66 லட்சம் ரொக்கம் சிக்கியது. மேலும், தலா ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 நிரந்தர வைப்புநிதிகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும், தலைநகர் கவுகாத்தியில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தலுக்தரின் அடுக்குமாடி குடியிருப்பிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஒரு புலித்தோலும், 2 கிலோ எடையுள்ள யானை தந்தமும், சில விலங்குகளின் உடல் பாகங்களும் கைப்பற்றப்பட்டன.
போலி சோதனை சாவடி மூலம் வசூல்
மண்டல வன அதிகாரி மொகித் சந்திர தலுக்தர், தேமாஜி மாவட்டத்தில் பணியில் நியமிக்கப்பட்டதில் இருந்தே, அங்கு போலியான சோதனை சாவடிகளை அமைத்து, காட்டில் இருந்து அவ்வழியாக பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்க தனது கீழ்மட்ட ஊழியர்களை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், அசாம் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற சர்பானந்தா சோனோவால் உத்தரவின் பேரில், அத்தகைய போலி சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன. இருப்பினும், வாகனங்களை ‘பறிமுதல்’ என்ற பெயரில், தனது அலுவலகத்தில் பிடித்து வைத்துக்கொண்டு, தலுக்தர் பணம் பறித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.