Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

கம்போடியா பிரதமருக்கு அபராதம் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதால் நடவடிக்கை


கம்போடியா நாட்டில் ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை யார் ஓட்டினாலும், அபராதம் விதிப்பது வழக்கம்.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமரும், கம்போடிய மக்கள் கட்சி தலைவருமான ஹூன் சென் (வயது 63), ஹெல்மட் அணியாமல் கோ காங் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மாட்டிக்கொண்டார்.

இது தொடர்பாக அவரை பிடித்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி அவருக்கு 3¾ அமெரிக்க டாலர் (சுமார் ரூ.265) அபராதம் விதித்து அதற்கான நோட்டீசை அளித்தார். அதுமட்டுமின்றி அவரிடம், “நீங்கள் நாம்பென் (தலைநகர்) சென்று, இந்த அபராதத்தை கட்ட வேண்டும்” என கூறினார்.

இதுகுறித்து ‘பேஸ்புக்’ வலைத்தளத்தில் ஹூன் சென் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், “நான் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்துவேன்” என கூறி உள்ளார்.

அத்துடன் தனது தவறுக்காக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.