இந்தியாவை அடிக்கடி பயமுறுத்தி வரும் சீனாவுக்கு அடிமேல் அடி விழுந்த வண்ணம் உள்ளது. அண்டை நாட்டுடன் இணக்கமாக செல்லலாம் என்று பொறுமை காத்து வந்த இந்தியாவுக்கு இப்போது நல்ல காலம் துவங்கி விட்டது. சீனாவின் அண்டை நாடான வியட்நாமுக்கு பிரமோஸ் ஏவுகணையை விற்பனை செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் இணக்கமான போக்கு என்பது இந்தியாவின் பாரம்பரிய கொள்கை. சீனாவின் போக்கு இதற்கு நேர்மாறானது. எல்லா பக்கங்களிலும் எல்லை பிரச்னை உள்ள நாடு என்று சீனா மீது தாராளமாக குற்றச்சாட்டு வைக்கலாம்.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், மிசோராம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மூக்கை நீட்டுவது சீனாவின் வாடிக்கை. வியட்நாம், மியான்மர், பூடான், நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் சீனாவுக்கு எல்லை பிரச்னை உள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலங்களில் அடிக்கடி சீண்டுவது சீனாவுக்கு வாடிக்கை.
அடிக்கடி போர் கப்பலை அனுப்பி, இந்திய கடல் பகுதியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்துவது, இலங்கையில் கடற்படை தளம் அமைத்து இந்தியாவை சீண்டுவது, பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவளித்து, ராணுவ உதவிகளை செய்வது, தேவையே இல்லாமல் எல்லைப்பகுதிகளில் ராணுவ முகாம்களை அமைப்பது என இந்தியாவுக்கு தொடர்ந்து இடையூறுகளை செய்து வருகிறது சீனா. ஏவுகணைகள், அதிநவீன பீரங்கிகள், போர் விமானங்கள், போர் கப்பல்கள், அணு ஆயுதங்கள் என கணக்கிட்டால், உலக நாடுகளின் வரிசையில் சீனா 3ம் இடத்திலும், இந்தியா 4ம் இடத்திலும் உள்ளன. இருந்தும், ஆசிய பகுதியில் தனது ஆளுமையை நிலை நாட்ட, வலுவான நாடான இந்தியாவை சீண்டுவதுதான் சரியாக இருக்கும் என்பது சீனாவின் கணக்கு.
அது இப்போது தப்புக்கணக்காகி விட்டது. பிரதமர் மோடியின் தற்போதைய வெளிநாட்டு பயணம் சீனாவுக்கு உண்மையிலேயே கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. என்.எஸ்.ஜி.யிலும் (அணு எரிபொருள் விநியோக கூட்டமைப்பு) மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பிலும் (எம்.டி.சி.ஆர்.) உறுப்பு நாடாக இந்தியா இடம் பெற போகிறது. இதையடுத்து, உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை மற்றும் அதன் தொழில்நுட்பங்களை பிற நாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதில் முதல் நாடாக வியட்நாமை தேர்வு செய்துள்ளதுதான் இந்தியாவின் ராஜதந்திரம். வியட்நாமுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள பகை உலகறியும். தெற்கு சீன கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்னை உள்ளது. நிலப்பரப்பில் இருந்து, கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இலக்கை தாக்கவல்ல பிரமோஸ் ஏவுகணையை தாருங்கள் என சீனாவின் தொல்லைகளை மனதில் கொண்டே வியட்நாம் தொடர்ந்து, இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வயதானவர்கள் இருப்பார்கள் என்ற புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதே கால கட்டத்தில் இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கப் போகிறது. இந்தியா ஆரம்பித்து விட்டது பிரமோஸ் ஏவுகணை விற்பனை என்ற தகவல் இப்போது சீனாவுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்க வேண்டும். சீனாவுக்கு முதல் ஷாக்தான் இது; அடுத்ததாக, தெற்கு சீன கடலில் அமெரிக்கா, இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி செய்ய திட்டமிட்டுள்ளது தான். சீனாவுக்கு இது மேலும் கலக்கத்தை தந்துள்ளது என்றால் மிகையல்ல.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.