Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 29, 2016

வீடியோ: தண்ணீர் ஊற்றி ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பிரேசில் வாலிபர்


பிரேசில் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்ட ஒலிம்பிக் சுடர் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ‘கவுண்டவுன்’ தொடங்கியதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தீபமானது சூரிய ஒளியை குவி லென்சில் குவித்து அதில் இருந்து உருவாகும் ஜூவாலை மூலம் ஏற்றப்பட்டது.

ஒலிம்பிக் தீபத்தை முதல் நபராக கிரீஸ் நாட்டை சேர்ந்த உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பெட்ரோனியாஸ் ஏந்தி சென்றார். அதன் பிறகு அது தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த தீபம் கிரீஸ் நாட்டில் 6 நாட்கள் பயணம் செய்தது. அதன் பிறகு பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டில் சில நாட்கள் வலம் வந்த ஒலிம்பிக் தீபம் மே 3-ந்தேதி பிரேசிலை வந்தடைந்துள்ளது.

பிரேசிலில் 26 மாநிலங்களை சேர்ந்த 329 நகரங்களில் இந்த தீபம் வலம் வருகிறது. கடைசியாக ஒலிம்பிக் தீபம், தொடக்க விழா நடைபெறும் மரக்கானா மைதானத்தை சென்றடையும். அங்குள்ள ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில் மத்திய பிரேசிலில் உள்ள மரக்கஜுவில், ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றவர் மீது ஒரு வாலிபர் தண்ணீரை ஊற்றியுள்ளார். அது ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றவர் மீது பட்டதால் சுடர் அணையவில்லை. தண்ணீர் ஊற்றிய மாத்யூ சில்வா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாத்யூ பேஸ்புக்கில் பதிவுகளை செய்து லைக் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. தனது வீரதீரத்தை நண்பர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒலிம்பிக் சுடர் வரும்போது தண்ணீரை ஊற்றியுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும், செல்பி எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தான் கைது செய்யப்பட்டது தொடர்பான வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்றதற்கு அரசியல் காரணம் ஏதேனும் இருக்குமா? என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 3 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.