Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

பிரேசிலில் 10 வயது சிறுமியை கற்பழித்து இதயத்தை பிடுங்கிய கொடூரன் கைது


பிரேசிலில் 10 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது இதயத்தை வெளியே எடுத்து புதைத்த காமுகன் லோப்சை போலீசார் கைது செய்தனர்

பிரேசிலில் 10 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது இதயத்தை காமுகன் பிடுங்கி எடுத்தான்.

பிரேசில் நாட்டில் மினாயிஸ் ஜெராய்ஸ் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ரெயானா அபரேசிதா காண்டிடா, சம்பவத்தன்று இவள் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது ஜெய்ரோ லோப்ஸ் (42) என்ற நபர் அந்த வழியாக வந்தான். சிறுமி ரெயானாவை பின் தொடர்ந்து சென்று அவளை கடத்தி சென்றான். பின்னர் சிறுமியை கற்பழித்து கொன்றான்.

அத்துடன் வெறி அடங்காத காமுகன் ரெயானாவின் உடலை பிளந்து அவளது இதயத்தை பிடுங்கி வெளியே எடுத்து விட்டு தனது பண்ணையில் புதைத்து விட்டான்.

இதற்கிடையே சிறுமியை காணாமல் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீலீசார் வழக்கு பதிவு செய்த காமுகன் ஜெய்ரோ லோப்சை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்த போது தான் இதயம் வெளியே எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 500 பேர் ஆவேசத்துடன் திரண்டனர். கொடூர காமுகனை அடித்து கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். எனவே, கைது செய்யப்பட்ட ஜெய்ரோ லோப்ஸ் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.