கிரிக்கெட்டில் மைதானத்தில் நடுவராக செயல்படும் சிலர் வித்தியாசமான ஸ்டைலில் முடிவை அறிவிப்பார்கள். சில நடுவர்கள் அவுட் கொடுக்கும்போது கையை மெதுவாக உயர்த்துவார்கள். சிலர் வீரர்களை பார்த்து ‘வெளியே போ’ என்ற தொனியில் ஆள்காட்டி விரலை பேட்ஸ்மேனை நோக்கி நீட்டுவார்கள்.
இதில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பில்லி பவுடன் வித்தியாசமானவர். சிக்ஸ் கொடுக்க வேண்டுமென்றால் தனது இரண்டு கைகளின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி அதன்பின் கைகளை தூக்குவார். அப்போது தூக்கிய கையை மீண்டும் ஒருமுறை இறக்கி தூக்குவார். அவுட் கொடுக்கும்போதும் அப்படித்தான். இவர் களத்தில் பணிபுரியும்போது இவரது ஸ்டைலை பார்க்க அழகாக இருக்கும்.
இப்படி அழகாக முடிவுகளை அறிவிக்கும் பில்லி பவுடனை இனிமேல் சர்வதேச போட்டியில் காணமுடியாது. ஏனென்றால், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை சர்வதேச நடுவர்கள் குழுவில் இருந்து நீக்கியது. எனவே, அவர் இனி நியூசிலாந்து நாட்டின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார்.
கடந்த 1995-ம் ஆண்டு சர்வதேச அளவில் நடுவராக பணியாற்ற தொடங்கிய பவுடன், இதுவரை 84 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் நடுவராக பணிபுரிந்துள்ளார்.
53 வயதாகும் பவுடன், கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஒரு வருடம் கழித்து மீண்டும் சர்வதேச குழுவில் இடம்பிடித்தார். தற்போது மீண்டும் நீக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.