Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

நாட்டிலே முதன்முறையாக டாக்டர் பட்டம் பெற்ற பெங்களூர் திருநங்கை அக்கய் பத்மசாலி


பெங்களூரை சேர்ந்த திருநங்கை சமூக போராளியான அக்கய் பத்மசாலி நாட்டிலேயே முதன் முறையாக டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அக்கய் பத்மசாலி. முதலில் ஆணாக பெற்றோருடன் வசித்து வந்த அவர், நாளடைவில் அவருக்குள் தோன்றிய பெண்மை உணர்வுகளைக் கண்டு, பிறர் கேலி செய்ய துவங்கினர். 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததால், வேலைக்குச் சென்றார். அங்கும் கேலி செய்வது தொடர்ந்தது. சிலர், பாலியல் தொல்லை கொடுக்கவே, வேலைக்குச் செல்லவில்லை.

16ஆவது வயதில், கார்ப்பரேஷன் சர்க்கிளில் தன்னை போலுள்ள சில திருநங்கைகளை சந்தித்தார். 17 வயதில் பெண்ணாக மாறியவுடன், அவரது வாழ்க்கை தடம்புரண்டது. கப்பன் பார்க், ஒசூர் சாலை பகுதிகளில் பிச்சை எடுத்தும், பாலியல் தொழிலாளியாகவும் வாழ்க்கை நடத்தினார். 20-வது வயதில் தான், அவருக்குள் தோன்றிய புத்துணர்வு, இந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நாமும் கவுரவத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளிகளுக்கான நல வாழ்வு மையமான, 'சங்கமா'வில், 2004இல் சேர்ந்தார். அந்த அமைப்பு மூலம் பலரை சந்திக்க நேர்ந்தது. 2013இல், தன்னைப் போலவே கருத்துகளை கொண்டோரை சேர்த்துக் கொண்டு, சங்கமாவிலிருந்து விலகி, 'ஆன்டீட்' என்ற அமைப்பை உருவாக்கினார்.

இந்த அமைப்பின் மூலம் பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த திருநங்கை சமூக போராளியான அக்கய் பத்மசாலிக்கு, நாட்டிலேயே முதன் முறையாக டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அமைதி மற்றும் கல்விக்கான இந்திய இணைய பல்கலைக்கழக சார்பில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து பேசிய அவர், ”இந்த கௌரவத்திற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓரங்கட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்” என்று கூறினார்.

முன்னதாக, தலைமை நீதிபதி அல்டாமாஸ் கபீரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஜனாபதி இவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற்ற மாநாட்டில் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து பேசுவதற்கு சர்வதேச சட்ட அமைப்பு சார்பில் அக்கய் அழைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.