புதுடெல்லி,
சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவனம் பர்ஸ்ட் லீசிங் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட். இந்த நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.274 கோடி கடனும், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.248 கோடி கடனும் வாங்கி மோசடி செய்ததாக அந்த வங்கிகள் சார்பில் சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரூக் இரானி மீது கடந்த ஆண்டு சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இந்த கடன் விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்தது பற்றி அமலாக்கப்பிரிவு தனியாக குற்றவியல் வழக்கு பதிவு செய்தது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால், இந்த வழக்கில், பரூக் இரானியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.51 கோடி மதிப்புள்ள நிரந்தர வைப்புநிதிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.