மலைக்கோட்டை,
வழுக்கை தலையில் முடிநடும் சிகிச்சைக்கு பிறகு இறந்த திருச்சியை சேர்ந்த பயிற்சி டாக்டரின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
முடிநடும் சிகிச்சை
திருச்சி சிந்தாமணி வெனீஸ்தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜோஸ்பின். ஓய்வுபெற்ற செவிலியர். இந்த தம்பதியின் மகன் சந்தோஷ்குமார்(வயது 22). இவர் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்தார். சந்தோஷ்குமாருக்கு தலையின் முன்பகுதி வழுக்கையாக இருந்ததால், நவீன முறையில் முடிநடும் சிகிச்சை பெற முடிவு செய்தார். இதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த மாதம் 15-ந் தேதி சிகிச்சை பெற்றார்.
அப்போது அவருக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவர் திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மீண்டும் சந்தோஷ்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த (மே) மாதம் 17-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து சந்தோஷ்குமாரின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தை அடுத்த ஒரு கல்லூரியின் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இந்தநிலையில் சந்தோஷ்குமார் சாவுக்கு முடிநடும் சிகிச்சையின்போது, நடந்த தவறுகளே காரணம் என அவரது பெற்றோர் கடந்த 1-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் சந்தோஷ்குமார் எப்படி இறந்தார்? என்பதை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.இதற்காக திருச்சியில் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட சந்தோஷ்குமார் உடலை தோண்டி எடுப்பதற்காக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு ஆனந்த் ஆகியோர் நேற்று திருச்சி வந்தனர். அவர்கள் சந்தோஷ்குமாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திருச்சி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரினர். இதற்கான அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று மாலை சந்தோஷ்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சரவணக்குமார், கல்பனாதேவி ஆகியோர் உடலை பரிசோதனை செய்தனர். சந்தோஷ்குமாரின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தடயஅறிவியல் மற்றும் ரசாயன சோதனைக்காக திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். இந்த பரிசோதனை குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர். அதன்அடிப்படையில் சென்னை போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை நடத்த உள்ளனர்.
முன்னதாக சந்தோஷ்குமாரின் உடலை பரிசோதனை செய்வதற்காக கல்லறை தோட்டத்தில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் காத்து இருந்தனர். அங்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அங்கு நின்று கொண்டு இருந்தனர். அப்போது சந்தோஷ்குமாரின் தாய் ஜோஸ்பின் கண்ணீர்விட்டு தேம்பி, தேம்பி அழுது கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.
முடிநடும் சிகிச்சையினால் பயிற்சி டாக்டர் இறந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.