Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016


இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டதில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அசாமில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த 3 வயது சிறுவன் கவுகாத்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

உத்தரபிரதேசத்தை அடுத்து குஜராத் மாநிலத்தில் 292 பேரும், மராட்டியத்தில் 276 பேரும், டெல்லியில் 264 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.