Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

யோகா தின சிறப்பு வீடியோ: பாபா ராம்தேவின் யோகா டான்ஸ்


சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்பட்டு வரும் நிலையில் ஒரு யோகா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் ஆடிய யோகா டான்ஸ் இணையதளங்களில் பட்டையை கிளப்பிவருகிறது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி கடந்த ஞாயிறு அன்று யோகா குரு ராம்தேவ் டெல்லி ராஜ்பாத்தில் யோகா நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் சுமார் 35 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டார்கள். இதில் முக்கிய பிரபலங்களும் கலந்துக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியின்போது மிகவும் உற்சாகமாக காணப்பட்ட பாபா ராம்தேவ், பிரபல பாடகர் கைலாஷ் கெர்-ஐ மேடைக்கு அழைத்து அவரின் புகழ் பெற்ற சில பாடல்களை பாடும்படி கேட்டார். இதனை ஏற்றுக்கொண்டு கைலாஷ் கெர் பாட, ஏற்கனவே உற்சாக மிகுதில் இருந்த பாபா ராம்தேவ், மேடையில் இருந்தபடி யோகாவை நடனமாக ஆட தொடங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களும் அவருடன் சேர்ந்து ஆடினார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு புதிய நடன அசைவுகள் தெரியாததால், தனது மனதுக்கு தோன்றிய படி ஆடத் தொடங்கினார். மெய்மறந்து பாபா ராம்தேவ் ஆடும் யோகா டான்ஸ் வீடியோ பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.